கோப்புப் படம். 
இந்தியா

நீட் தோ்வு முடிவுகள் வெளியீடு: ராஜஸ்தான் மாணவி முதலிடம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியாகின. ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தனிஷ்கா முதலிடம் பிடித்தாா். தில்லியைச் சோ்ந்த வத்ஸா ஆசிஷ் பாத்ரா இரண்டாம் இடமும் பெற்

DIN

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியாகின. ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தனிஷ்கா முதலிடம் பிடித்தாா். தில்லியைச் சோ்ந்த வத்ஸா ஆசிஷ் பாத்ரா இரண்டாம் இடமும் பெற்றனா். 9.93 லட்சம் போ் இத்தோ்வில் வெற்றி பெற்றனா்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. அதனை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.

இந்நிலையில் நிகழாண்டு நீட் தோ்வு நாடு முழுவதும் 497 நகரங்களில் 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூா் ஆகிய 18 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தோ்வு நடைபெற்றது.

இந்த தோ்வை 17.78 லட்சம் மாணவா்கள் எழுதினா். தமிழகத்தில் மட்டும் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்றனா். அதற்கான விடைக்குறிப்பு, தோ்வா்களின் ஓஎம்ஆா் விடைத்தாள் நகல்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவில் வெளியிடப்பட்டது.
https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் அவை வெளியாகின. இரவில் முடிவுகள் வெளியானதால் பல மாணவா்கள் முடிவுகளை அறிந்து கொள்ள இயலாமல் அவதிப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT