இந்தியா

விமான நிறுவனங்களின் மொத்த நஷ்டம் எவ்வளவு தெரியுமா?

DIN

இந்தியாவில் செயல்பட்டு வரும் விமான சேவை நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இந்த நிதியாண்டில் ரூ.17,000 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் நிதி ஆண்டில் விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் ரூ.15,000 கோடியிலிருந்து ரூ.17,000 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை நிறுவனங்களில் நடைமுறைச் செயலில் 45% ஆக இருக்கும் விமான எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலை அதிகரித்ததே விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் அதிகரிக்க காரணம் என புகார் எழுந்துள்ளது.

விமான சேவை நிறுவனங்கள் நடைமுறைச் செலவினத்தில் 35%-லிருந்து 50% அளவுக்கு டாலரில் செலுத்த வேண்டியுள்ளது. ரூபாய் கணக்கில் டாலரின் மாற்றுமதிப்பு உயர்வதாலும் விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் அதிகரிக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில் விமான சேவை நிறுவனங்களின் மொத்த கடனளவும் ரூ. 1 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இண்டிகோ நிறுவனம் ரூ.1,064 கோடியும், ஸ்பைஸ்ஜெட் ரூ.789 கோடியும் நஷ்டம் அடைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT