இந்தியா

பினராயி விஜயனுடன் தொல். திருமாவளவன் சந்திப்பு

விசிக தலைவர் தொல். திருமாவளவன், திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து ஓணம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

DIN

விசிக தலைவர் தொல். திருமாவளவன், திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து ஓணம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கேரளம் சென்றுள்ள நிலையில் இன்று முதல்வர் பினராயி விஜயனை அவரது இல்லத்தில் சந்தித்து ஓணம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தொல். திருமாவளவன், 'ஓணம் வாழ்த்துத் தெரிவிக்க முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க விருப்பம் தெரிவித்தோம். 15 நிமிடங்களில் அனுமதி கிடைத்தது. உடனே அனுமதியளித்தார் முதல்வர். அவருடைய துணைவியாரை வரவழைத்து அறிமுகம் செய்தார். என்னைக் கண்டதும் ஹேப்பி ஓணம் என்று கூறினார். நன்றி' எனப் பதிவிட்டுள்ளார். 

மேலும், தமிழகம், கேரளத்தில் அரசியல் நிலைமை குறித்துப் பேசினோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT