தொலைநிலை வழி பட்டப் படிப்புகளும் செல்லும்: யுஜிசி
‘திறந்தநிலைக் கல்வி, தொலைநிலைக் கல்வி மற்றும் இணைய வழிகளில் வழங்கப்படும் பட்டங்கள், வழக்கமான நேரடி முறையில் வழங்கப்படும் பட்டங்களுக்கு இணையானது’
‘திறந்தநிலைக் கல்வி, தொலைநிலைக் கல்வி மற்றும் இணைய வழிகளில் வழங்கப்படும் பட்டங்கள், வழக்கமான நேரடி முறையில் வழங்கப்படும் பட்டங்களுக்கு இணையானது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலா் ரஜனீஷ் ஜெயின் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களால், யுஜிசி-யின் பட்டப் படிப்புகள் விவரக் குறியீடு 2014 அறிவிக்கைக்கு உட்பட்டு திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வி வழியிலும் மற்றும் இணைய வழியிலும் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்கள், வழக்கமான நேரடி முறையில் வழங்கப்படும் பட்டங்களுக்கு இணையாக கருதப்பட வேண்டும்’ என்றாா்.
‘யுஜிசி (திறந்தநிலை, தொலைநிலைக் கல்வி திட்டங்கள் மற்றும் இணையவழி கல்வித் திட்டங்கள்) வழிகாட்டுதல் பிரிவு 22-இன் கீழ் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.