இந்தியா

பாகிஸ்தானில் வெள்ளம்: உயிரிழந்தவர்களுக்கு ராகுல் இரங்கல்

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். 

PTI

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கி 1,391 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை 12,722 பேர் காயமடைந்தனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ராகுல் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் ஒரு பயங்கரமான சோகம்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான அனுதாபங்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

முன்னாள் காங்கிரஸ் தலைவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை "பாரத் ஜோடோ யாத்திரை" மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை!

டிட்வா புயல்: நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு!

எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை நாளைவரை ஒத்திவைப்பு!

சென்னையை நோக்கி வரும் மேகக் கூட்டங்கள்! அடுத்த 2 மணி நேரத்துக்கு கவனம்

வண்ண நிலவே... அனுபமா!

SCROLL FOR NEXT