இந்தியா

கேரளத்தில் களைகட்டிய ஓணம்: 7 நாள்களில் ரூ.624 கோடிக்கு மது விற்பனை!

PTI

கேரளத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 7 நாள்களில் ரூ.624 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.  

கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையையொட்டி கேரளத்தில் மது விற்பனை மற்ற நாள்களை விட அதிகமாக இருப்பது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டு கேரளத்தில் 7 நாள்களில் ரூ.624 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில மதுபான கழகம் தெரிவித்துள்ளது. 

கொல்லத்தில் உள்ள ஆசிரமம், திருவனந்தபுரத்தில் உள்ள பவர் ஹவிஸ் சாலை, திருச்சூரில் உள்ள இரிஞ்சாலக்குடா, செர்தலாவில் உள்ள கோர்ட் ஜங்ஷன் மற்றும் கண்ணூரில் உள்ள பையனூர் ஆகிய ஐந்து விற்பனை நிலையங்களில் திருவோணத்திற்கு முதல் நாளான உத்திராடம் தினத்தில் தலா ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையாகியுள்ளது. 

ஆசிரமம் விற்பனை நிலையத்தில் மட்டும் ரூ.1.06 கோடிக்கு விற்பனையானது. இது மாநிலத்திலேயே அதிகபட்ச விற்பனையாகும். உத்திராடம் நாளில் பெவ்கோ பிராண்ட் நிறுவனம் 118 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்தாண்டு இது ரூ.81 கோடியாக இருந்தது. 

ஓணம் சீசன் செப்.1 முதல் 11 வரை. இருப்பினும் செப்.1-7 தேதிகளிலேயே 624 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளோம் என்று பெவ்கோ நிறுவனம் சிஎம்டி யோகேஷ் குப்தா தெரிவித்தார். கடந்தாண்டு ஓணம் சீசனில் 561 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. 

ஓணம் சீசன் முடிவதற்குள் ரூ.750 கோடி விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம் என்று குப்தா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT