இந்தியா

மாநிலங்களவை நியமனம்: பிரதமர் மோடிக்கு நன்றித் தெரிவித்த பிப்லப் தேப்!

திரிபுரா மாநிலத்தின் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக அறிவித்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு  முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப் நன்றி தெரிவித்தார். 

DIN

திரிபுரா மாநிலத்தின் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக அறிவித்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு  முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப் நன்றி தெரிவித்தார். 

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக மாணிக் சாஹா முதல்வராக பதவியேற்றதால் காலியான இடத்திலிருந்து தேப் போட்டியிடுகிறார். 

திரிபுராவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்கான பாஜக வேட்பாளராக என்னை நியமித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி என்று தேவ் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். 

திரிபுரா மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக பணியாற்ற உறுதி பூண்டுள்ளேன் என்று அவர் கூறினார். 

செப்டம்பர் 22-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் தேப்யின் வெற்றி நிச்சயம். 

தேவ் கடைசி நாளான திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 75,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

கோவை குற்றால அருவியில் குளிக்கத் தடை!

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!

ராசிபுரம் அருகே 3 பெண் குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை!

SCROLL FOR NEXT