பெங்களூருவில் பறக்கும் பேருந்து: நிதின் கட்கரி யோசனை 
இந்தியா

பெங்களூருவில் பறக்கும் பேருந்து: நிதின் கட்கரி யோசனை

பறக்கும் பேருந்து திட்டம் கொண்டு வருவது குறித்து தொழில்நுட்ப அறிக்கையை தயார் செய்யவிருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

DIN

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பறக்கும் பேருந்து திட்டம் கொண்டு வருவது குறித்து தொழில்நுட்ப அறிக்கையை தயார் செய்யவிருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வெகு விரைவான பொதுப் போக்குவரத்து ஒன்றே, பெங்களூருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பயன்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நான் கர்நாடக முதல்வர் பொம்மையுடன் இது பற்றி பேசினேன். பிலின்பின்ஸில் இருப்பது போல பறக்கும் பேருந்து திட்டத்தை முதல்வரிடம் தெரிவித்தேன். இது குறித்து தொழில்நுட்ப ரீதியில் ஆய்வு செய்ய பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரிய நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் அறிக்கை நிறைவடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்கரி கூறினார்.

இது மட்டுமல்லாமல், மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, டிராலி பேருந்துகளை பெங்களூருவில் செயல்படுத்தலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

மேட்டூர் அணை நிலவரம்!

சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்

விவசாயத் தோட்டத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த ’கொசு டொ்மினேட்டா் ரயில்’

SCROLL FOR NEXT