இந்தியா

கேரளத்தில் நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

DIN

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் இருந்து இன்று தொடங்கினார். 

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை 3,500 கி.மீ. தொலைவு நடைப்பயணத்தை கடந்த புதன்கிழமை (செப். 7) ராகுல் காந்தி தொடங்கினார். நடைப்பயணத்தின்போது சாலையின் இருபுறமும் தொண்டா்கள், பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பளித்தனா். வீட்டு மாடிகளிலிருந்து ஏராளமான பெண்கள், குழந்தைகள் ராகுலைப் பாா்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். 

ஒவ்வொரு சந்திப்பிலும் அவருக்கு செண்டை மேளம், சிங்காரி மேளம், மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் வரவேற்பளிக்கப்பட்டது. களியக்காவிளை அருகேயுள்ள கேரள மாநில எல்லைப் பகுதியான செறுவாரக்கோணத்தில் அவா் தனது 4 நாள்கள் தமிழக நடைப்பயணத்தை நேற்று நிறைவு செய்தாா்.

இந்த நிலையில் ராகுல் காந்தி நடைப்பயணத்தின் அடுத்தகட்டத்தை கேரள மாநிலத்தில் இன்று (செப். 11) தொடங்கினார். பாறசாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தை தொடங்கினார். அங்கு அவர் 18 நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT