கோப்புப்படம் 
இந்தியா

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்: முதல்வர் கெலாட்

ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். 

DIN

ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். 

இதுகுறித்து கெலாட் மேலும் கூறுகையில், 

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கெலாட் கடுமையாகச் சாடியுள்ளார். ஜோத்பூரில் நடந்த பாஜகவின் பூத் தொழிலாளர்கள் கூட்டத்தில் அவர் பொய் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

பொதுமக்களின் மனநிலை  மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை விரும்புவதால் பாஜக தலைவர்கள் கவலையடைந்துள்ளனர். 

சிரஞ்சீவி உடல்நலக் காட்பபீட்டுத் திட்டம் உள்பட ராஜஸ்தானில் சிறந்த திட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வேறு எந்த மாநிலத்திலும் காண முடியாது. 

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறது என்று சுரு பகுதியில் செய்தியாளர்களிடம் கெலாட் கூறினார். 

மேலும்,100 முறை பொய் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற கோட்பாட்டில் பாஜக தலைவர்கள் செயல்படுகிறார்கள். குற்ற வழக்குகளின் பதிவு அதிகரிக்கும், ஆனால் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று அர்த்தமல்ல. 

எப்.ஐ.ஆர்.களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற ராஜஸ்தான் அரசின் முடிவை ஆராய்ந்து நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்று ஜோத்பூரில் உள்துறை அமைச்சர் கூறியிருக்க வேண்டும். எஃப்.ஐ.ஆர் கட்டாயமாகப் பதிவு செய்யப்படும் நாட்டிலேயே முதல் மாநிலம் ராஜஸ்தான், என்று அவர் கூறினார். 

ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

SCROLL FOR NEXT