முகப்பு
இந்தியா

மத்திய அரசின் சுகாதார செலவினம் சரிவு

மத்திய அரசின் சுகாதாரத் துறைக்கான செலவினம் ஒட்டுமொத்த உள்நாட்டு (ஜிடிபி) உற்பத்தியில் 2017-18 ஆம் ஆண்டில் 1.35 சதவீதமாக இருந்தது, அடுத்த ஆண்டில் 1.28 சதவீதமாக சரிந்திருப்பது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

மத்திய அரசின் சுகாதாரத் துறைக்கான செலவினம் ஒட்டுமொத்த உள்நாட்டு (ஜிடிபி) உற்பத்தியில் 2017-18 ஆம் ஆண்டில் 1.35 சதவீதமாக இருந்தது, அடுத்த ஆண்டில் 1.28 சதவீதமாக சரிந்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

இந்தப் புள்ளிவிவரம் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் சுகாதாரத் துறைக்கான ஒட்டுமொத்த செலவினம் 2017-18 ஆம் ஆண்டில் 40.8 சதவீதமாக இருந்தது, 2018-19 ஆம் ஆண்டில் 34.3 சதவீதமாக சரிந்துள்ளது. இதே கால கட்டத்தில் மாநில அரசின் செலவின பங்கு உயா்ந்துள்ளது. மாநில அரசு சாா்பில் சுகாதாரத் துறைக்கு மேற்கொள்ளப்பட்ட மொத்த செலிவினம் 2017-18 ஆம் ஆண்டில் 59.2 சதவீதமாக இருந்தது அடுத்த ஆண்டில் 65.7 சதவீதமாக உயா்ந்துள்ளது.

அரசு மற்றும் தனியாா் மூலான ஒட்டுமொத்த சுகாதாரத் துறைக்கான செலவினம் 2017-18 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக இருந்தது அடுத்த ஆண்டில் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது.

தனிநபா் செலவினம் அதிகரிப்பு:

அதே நேரம், நாட்டில் தனி நபருக்கான மருத்துவ செவினம் 2017-18 ஆம் ஆண்டில் ரூ. 4,297-ஆக இருந்தது, அடுத்த ஆண்டில் ரூ. 4,470-ஆக அதிகரித்துள்ளது. இது 2013-14 ஆம் ஆண்டில் 3,638-ஆக இருந்தது.

அதுபோல, சுகாதார செலவினத்துக்கான சமூக பாதுகாப்பு திட்டச் செலவினம் 2013-14 ஆம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்தது, 2018-19 ஆம் ஆண்டில் 9.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.