இந்தியா

நெடுஞ்சாலை திட்டங்களில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு

PTI


புது தில்லி: இந்தியாவில் உள்ள சாலை மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

19வது இந்திய - அமெரிக்க பொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய நிதின் கட்கரி, நாம் இருவரும் இயற்கையாக அமைந்த கூட்டாளிகள். வளர்ச்சிக்காக பரஸ்பரம் பல்வேறு உதவிகளை செய்து கொண்டுள்ளோம். இரு நாடுகளுமே சமூக, பொருளாதார, கொள்கைகளில், தத்தமது நம்பிக்கை, மரியாதை, கூட்டாண்மை உள்ளிட்டவற்றை எப்போதும் வெளிப்படுத்தி வருகின்றன.

இந்த ஆண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான புதிய கொள்கைகளை உருவாக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டில் 70 சதவீத சரக்குப் போக்குவரத்து மற்றும் 90 சதவீத மக்கள் போக்குவரத்து சாலைவழியாகவே நடக்கிறது. எனவே, இந்தியாவின் சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை திட்டங்களில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT