இந்தியா

வீட்டை விட்டு ஓடிய யூடியூபர்: விடியோ வெளியிட்டு மகளைக் கண்டுபிடித்த பெற்றோர்

DIN


பெற்றோர் திட்டியதால், வீட்டை விட்டு ஒடிய யூடியூபரான பிஸ்தான் காவ்யா என்று அறியப்படும் மகளை, அதே யூடியூப்பில் விடியோ வெளியிட்டு பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்.

தங்களது மகளைக் காணவில்லை என்று பெற்றோர் கதவி அழும் விடியோ யூடியூப்பில் வெளியாகி வைரலான நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஒரு ரயிலில் இருந்த காவ்யா கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தில் பிரபலமான யூடியூபராக விளங்கி வருபவர் காவ்யா யாதவ். இவரைக் காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்த நிலையில், அவரது பெற்றோர் மகளைக் காணவில்லை என்றும் தேடித் தருமாறு கண்ணீருடன் வேண்டிக் கொண்ட விடியோ வைரலானது.

பிறகு காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்கி, அவர் அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் ரயிலில் சென்று கொண்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மீண்டும் பெற்றோருடன் இணைந்த அந்த விடியோவும் யூடியூப்பில் வெளியாகி பல லைக்குகளை அள்ளியது. தந்தை திட்டியதால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாக அப்பெண் கூறியுள்ளார்.

இந்த யூடியூப்பும், சமூக வலைத்தளப் பக்கங்களும் இளம் தலைமுறையினரை பல சிக்கல்களுக்கு உள்ளாக்கி வருகிறது. அதனை நல்வழிக்கு மட்டும் இளைஞர்கள் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பதே பெற்றோரின் ஆசை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT