முகப்பு
இந்தியா

சோனாலி போகாட் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

ஹரியாணா பாஜக மூத்த தலைவரும், டிக்டாக் பிரபலமுமான சோனாலி போகாட் கொலை வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

ஹரியாணா பாஜக மூத்த தலைவரும், டிக்டாக் பிரபலமுமான சோனாலி போகாட் கொலை வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எழுதிய பரிந்துரைக் கடிதத்தை ஏற்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.

ஆகஸ்ட் 22-ஆம் தேதி கோவா விடுதியில் விருந்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனாலி போகாட் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸாா், சோனாலி போகாட்டுடன் வந்த இரண்டு உதவியாளா்கள் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனா். அவா்கள் சோனாலி போகாட்டுக்கு அன்று இரவு வலுக்கட்டாயமாக போதை மருந்தை அளித்த சிசிடிவி விடியோ பதிவையும் கோவா போலீஸாா் கைப்பற்றி தீவிரமாக விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘சோனாலி போகாட் கொலை வழக்கை கோவா போலீஸாா் சிறப்பாக விசாரித்து ஆதாரங்களை சேமித்துள்ளனா். ஆனால், ஹரியாணா மக்கள் மற்றும் சோனாலி போகாட்டின் சகோதரியின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது’ என்றாா்.

கோவா மாநில அரசின் பரிந்துரையை ஏற்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சகத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.