இந்தியா

கேரள முன்னாள் அமைச்சர் என்.எம்.ஜோசப் காலமானார்

DIN

கேரள முன்னாள் அமைச்சரும், மூத்த ஜனதா தளத் தலைவருமான பேராசிரியர் என்.எம்.ஜோசப் செவ்வாய்க்கிழமை காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 

அவருக்கு வயது 79.

ஜோசப் 1987 முதல் 1991 வரை இரண்டாவது ஈ.கே.நாயனார் அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்தார்.

பாலா செயின்ட் தாமஸ் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராகவும் இருந்தார்.

ஜனதா தளத்தின் மாநிலத் தலைவராக இருந்த ஜோசப், அதன் தேசியத் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 

இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெறும் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 

அவரின் மறைவுக்கு கேரள முன்னாள் அமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜோசப் "எரியப்படாத ஏடுகள்" என்ற சுயசரிதையை வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT