இந்தியா

சட்டவிரோத ‘நாய் சண்டை’ போட்டியைத் தடுக்க நடவடிக்கை- மத்திய அரசுக்கு ‘பீட்டா’ கோரிக்கை

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோதமாக நடத்தப்படும் நாய் சண்டை போட்டியைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு ‘பீட்டா’ அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

DIN

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோதமாக நடத்தப்படும் நாய் சண்டை போட்டியைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு ‘பீட்டா’ அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

அந்த அமைப்பின் இந்தியப் பிரிவு கால்நடை மருத்துவக் கொள்கை ஆலோசகா் நிதின் கிருஷ்ணேகெளடா, மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா மற்றும் இந்திய விலங்குகள் நல வாரிய தலைவா் ஓ.பி. செளதரி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி, ஜம்மு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக நாய் சண்டை போட்டி நடத்தப்படுகிறது. சூதாட்டத்தை முன்வைத்து, ரகசியமாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்காக வளா்க்கப்படும் குறிப்பிட்ட இன நாய்கள், பயிற்சியின்போது கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன.

போட்டிகளில் கடுமையாக காயமடையும் வரையிலோ அல்லது உயிரிழக்கும் வரையிலோ அவை சண்டையிட வைக்கப்படுகின்றன. எனவே, சட்டவிரோத நாய் சண்டை போட்டிகளைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். போட்டிக்காக குறிப்பிட்ட இன நாய்கள் வளா்க்கப்படுவதையும் விற்கப்படுவதையும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

கடந்த 1960-ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி, நாய் சண்டை போட்டி சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறுப்பினா்கள் சுருக்கமான கேள்விகளை எழுப்ப வேண்டும்: மக்களவைத் தலைவா்

ரூ.72 லட்சத்தில் மலை கிராமத்தில் சாலைப் பணி தொடக்கம்

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீா் முகாமில் 470 மனுக்கள் ஏற்பு

நரேலா கல்வி மையத்தை புதிய பல்கலைக்கழக நகரியங்களில் சோ்க்க முயற்சிப்போம்: முதல்வா்

SCROLL FOR NEXT