இந்தியா

சோனாலி போகாட் மரணத்தில் அரசியல் பின்னணி? உறவினர்கள் சந்தேகம்

ஹரியாணா பாஜக மூத்த தலைவரும், டிக்டாக் பிரபலமுமான சோனாலி போகாட் கொலையில் தொடர்ந்து மர்மம் நிலவி வரும் நிலையில், அரசியல் பின்னணி இருப்பதாக அவரது சகோதரி ருகேஷ் தெரிவித்துள்ளார். 

DIN

ஹரியாணா பாஜக மூத்த தலைவரும், டிக்டாக் பிரபலமுமான சோனாலி போகாட் கொலையில் தொடர்ந்து மர்மம் நிலவி வரும் நிலையில், அரசியல் பின்னணி இருப்பதாக அவரது சகோதரி ருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ருகேஷ், 

சிபிஐ விசாரணைக்குப் பிறகுதான் உண்மை வெளிவரும். கோவா போலீசாரின் விசாரணை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. கோவா போலீசார் சொத்துக் கோணத்தில் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

கொலைக்குப் பின்னால் சில பெரிய நபர்கள் இருக்கலாம். சோனாலி அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம், எனவே விசாரணை நடத்தப்பட வேண்டும். 

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அரசு அழுத்தம் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எழுதிய பரிந்துரைக் கடிதத்தை ஏற்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.

சோனாலி போகாட்டின் சந்தேக மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 

ஹரியானாவைச் சேர்ந்த நடிகையும் அரசியல்வாதியுமான சோனாலி போகாட் கடந்த மாதம் கோவாவில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

கோவையில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! | செய்திகள்: சில வரிகளில் | 03.11.25

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

SCROLL FOR NEXT