இந்தியா

நீதிபதிகள் ஓய்வு வயதை உயா்த்த பாா் கவுன்சில் ஆதரவு

DIN

உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை முறையே 65, 67-ஆக உயா்த்த இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) தலைமையிலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தற்போது விசாரணை நீதிமன்ற நீதித் துறை அதிகாரிகள், உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது முறையே 60, 62, 65- ஆக உள்ளது. இந்த நிலையில், அனைத்து மாநில வழக்குரைஞா்கள் சங்கம், உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) பங்கேற்ற கூட்டுக் கூட்டம் புதன்கிழமை தில்லியில் நடைபெற்றது.

இதில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 62-இலிருந்து 65 ஆகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 65-இலிருந்து 67 ஆகவும் அதிகரிக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுமட்டுமன்றி பல்வேறு கமிஷன்கள், மன்றங்களின் தலைவா்களாக அனுபவமிக்க மூத்த நீதிபதிகளை நியமிக்க நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து பிசிஐ செயலா் ஸ்ரீமான்டோ சென் கூறுகையில், ‘இந்தத் தீா்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கும், மத்திய சட்டத் துறை அமைச்சருக்கும் வலியுறுத்தப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT