இந்தியா - பூடான் எல்லை நுழைவுவாயில் செப்.23-ல் திறப்பு 
இந்தியா

இந்தியா - பூடான் எல்லை நுழைவுவாயில் செப்.23-ல் திறப்பு

கரோனா பேரிடர் காரணமாக மூடப்பட்டிருந்த இந்தியா - பூடான் எல்லை நுழைவு வாயில் செப்டம்பர் 23ஆம் தேதி திறக்கப்படுகிறது.

PTI


கோக்ரஜார்: கரோனா பேரிடர் காரணமாக மூடப்பட்டிருந்த இந்தியா - பூடான் எல்லை நுழைவு வாயில் செப்டம்பர் 23ஆம் தேதி திறக்கப்படுகிறது.

இந்தியா - பூடான் எல்லையின் நுழைவு வாயிலான அசாம் மாநிலத்தில் உள்ள சம்ரப் ஜோங்கர் மற்றும் கெலேபு நுழைவு வாயில்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவிருக்கிறது.

இது தொடர்பாக இரு தரப்பினரும் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, சுமார் இரண்டரை ஆண்டுகாலமாக மூடப்பட்டிருக்கும் எல்லை நுழைவு வாயில் திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா பேரிடர் தற்போது குறைந்து, நிலைமை மேம்பட்டுள்ளதால், வணிகம், வர்த்தகம் மற்றும் அதிகாரப்பூர்வ பயணங்கள் உள்ளிட்டவற்றுக்காக எல்லை நுழைவுவாயில் திறக்கப்படுவதாக பூடா அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், பூடான் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் வந்து சுற்றிப் பார்க்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக சுற்றுலாப் பயணிகளுக்கு ஐந்து நுழைவு வாயில்கள் வழியாக அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பம்சங்களையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT