இந்தியா

சில மணி நேரங்கள் கோடீஸ்வரராக வாழ்ந்த குஜராத் நபர்? அதிசயம் நடந்தது எப்படி?

IANS


ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் டீமாட் கணக்கில் பத்தல்ல, நூறல்ல ரூ.11,677 கோடி ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரமேஷ் சாகர் என்பவரின் டீமாட் கணக்கில், திடீரென இவ்வளவு கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக அவருக்கு குறுந்தகவல் வந்ததும், அவர் திக்குமுக்காடிப்போனார். இந்த டீமாட் கணக்கில் ரூ.11,677 கோடி சுமார் 8 மணி நேரம் இருந்தது. 

ரமேஷ் சாகர் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார், ஆனால் போன ஆண்டுதான் கோடக் செக்யூரிடிஸில் டீமாட் கணக்குத்தொடங்கினார்.

கடந்த ஜூலை 22ஆம் தேதி அவரது வங்கிக் கணக்கில் ரூ.116,77,24,43,277.10 கோடி வரவு வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வந்தது. ஆனால், அன்று இரவு 8 மணிக்கெல்லாம் வங்கிக் கணக்கிலிருந்து அந்தத் தொகை திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது என்றார்.

இவர் மட்டுமல்லாமல், அன்றைய நாளில், டீமாட் கணக்கு வைத்திருந்த பலருக்கும் இந்த மேஜிக் நடந்துள்ளது பிறகுதான் தெரிய வந்துள்ளது.

டீமாட் கணக்கு என்பது, பங்குச் சந்தையில் வணிகம் செய்யத் தேவையான ஒரு கணக்கு ஆகும். ஒருவர் பங்குச் சந்தையில் ஒரு பங்கினை வாங்கினாலும் விற்றாலும் அது இந்த டீமாட் கணக்கில்தான் பதிவு செய்யப்படும். அதாவது டீமெட்டிரியலைசேஷன் என்பதுதான் டீமேட் கணக்கு. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT