லகிம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் நிகாசன் பகுதியில் தலித் சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்ற வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சகோதரிகள் இருவரின் உடல்களும், அவர்களது வீட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கரும்புத் தோட்டத்திலிருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதையும் படிக்க.. மருத்துவமனை தூய்மை பணியாளரை கரம் பிடித்த பெண் மருத்துவர்
லகிம்பூர் கேரி காவல்துறை கண்காணிப்பாளர் இது குறித்துப் பேசுகையில், நள்ளிரவு முழுக்க நடந்த தேடுதல் வேட்டையில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இரண்டு சகோதரிகளுடனும் ஜுனைத், சோஹாலி இருவரும் பழகி வந்துள்ளனர். இவர்களை சந்திக்க சகோதரிகள் வீட்டை விட்டுக் கிளம்பியிருக்கிறார்கள். பிறகு அவர்களை காணவில்லை. சடலமாகத்தான் கண்டெடுக்கப்பட்டனர்.
குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், சகோதரிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதை ஜுனைதும் சோஹாலியும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.