இந்தியா

வேலைவாய்ப்பில் சமத்துவமின்மை: பாதிப்புக்குள்ளாகும் பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள், பெண்கள்

DIN

வேலைவாய்ப்பில் பெண்கள், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தொடர் பாகுபாடு காட்டப்படுவதாக சமீபத்தில் வெளியான ஆக்ஸ்பாம் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆக்ஸ்பாம் அறிக்கை சமூகத்தில் நிலவும் அசமத்துவம் தொடர்பாக அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தேசிய பாகுபாடு அறிக்கை 2022ஐ சமீபத்தில் வெளியானது. மத்திய அரசின் 2004 முதல் 2020 வரையிலான தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு தரவுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  

கரோனா தொற்று பேரிடர் காலத்தின் முதல் காலாண்டில் கிராமப்புற பகுதிகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களைக் காட்டிலும் இஸ்லாமியர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதன்படி இஸ்லாமியர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 31.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

அதேபோல் ஆண்களுடன் ஒப்பிடுகையில் சமமான கல்வித் தகுதி மற்றும் வேலை அனுபவம் பெற்றிருந்த போதிலும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதிலும், வேலைக்கான ஊதியம் வழங்குவதிலும் தொழிலாளர் விரோதப் போக்குகள் கடைபிடிக்கப்படுவது தொடர்வதாக ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது. 

பணி செல்லும் பெண்களில் 67 சதவிகிதமானவர்களுக்கு பாலின பாகுபாடு காரணமாகவும்,  33 சதவிகிதமானவர்களுக்கு போதிய அனுபவமின்மை காரணமாகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஆய்வு முடிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பெண்கள் வேலைவாய்ப்புகளில் பங்கெடுக்கும் விகிதம் 2020-21ஆம் ஆண்டில் 25.1 சதவிகிதமாக உள்ளதாகவும் இதுவே 2004-05ஆம் ஆண்டில் 42.7 சதவிகிதமாக இருந்ததையும் ஆய்வு முடிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

பெண்கள் மட்டுமல்லாது பட்டியலினத்தவர்கள், பழங்குடியினவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஆகியோர் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், விவசாயப் பலன்களைப் பெறுதல் போன்றவற்றில் ஒடுக்கப்படுவதாக ஆக்ஸ்பாம் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பட்டியலின மக்கள் ஊதியம் பெறுவதில் பெரும் ஒடுக்குமுறை நிகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை நகர்ப்புற பகுதிகளில் பட்டியலின வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் ரூ.15,312ஐ ஊதியமாகப் பெறும் நிலையில் பொதுப்பிரிவினர் 33 சதவிகிதம் அதிகமாக ரூ.20346ஐ ஊதியமாகப் பெறுகின்றனர் எனவும் ஆக்ஸ்பாம் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT