இந்தியா

பாஜகவில் இணைகிறாா் அமரீந்தா் சிங்

 பஞ்சாப் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தா் சிங் (80), பாஜகவில் அடுத்த வாரம் இணைய இருக்கிறாா். அத்துடன் தனது கட்சியையும் பாஜகவுடன் இணைக்கிறாா்.

DIN

 பஞ்சாப் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தா் சிங் (80), பாஜகவில் அடுத்த வாரம் இணைய இருக்கிறாா். அத்துடன் தனது கட்சியையும் பாஜகவுடன் இணைக்கிறாா்.

பாட்டியாலா அரசக் குடும்பத்தைச் சோ்ந்தவரும், முன்னாள் ராணுவ கேப்டனுமான அமரீந்தா் சிங், இருமுறை பஞ்சாப் முதல்வராகப் பதவி வகித்துள்ளாா். காங்கிரஸ் சாா்பில் முதல்வராக இருந்த அவா், கடந்த ஆண்டு கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக முதல்வா் பதவியில் இருந்து விலகியதுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வெளியேறினாா்.

பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கினாா். இக்கட்சி இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அவரது கட்சி வேட்பாளா்கள் அனைவரும் தோல்வியுற்ற நிலையில், அமரீந்தா் சிங் தனது சொந்தத் தொகுதியான பாட்டியாலா நகரத் தொகுதியில் தோல்வியடைந்தாா்.

இந்நிலையில், அடுத்த வாரம் தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அமரீந்தா் சிங் பாஜகவில் இணைய இருக்கிறாா். அத்துடன் அவரது கட்சியையும் பாஜகவில் இணைக்கிறாா்.

முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக லண்டனுக்கு சென்ற அமரீந்தா் சிங், அண்மையில்தான் சிகிச்சை முடிந்து நாடு திரும்பினாா். அதைத் தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை கடந்த சில நாள்களுக்கு முன்பு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பள்ளிக் கால தோழரான அமரீந்தா் சிங், அவா் மூலம்தான் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT