கோப்புப் படம் 
இந்தியா

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கை

அவசியமின்றி, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று லக்னௌ மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

PTI


லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அவசியமின்றி, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று லக்னௌ மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லக்னௌவின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், செப்டம்பர் 17 வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை முன் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

எனவே, லக்னௌ வாழ் மக்களுக்கு கனமழை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, மிகவும் தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவும். பழைய கட்டடங்களில் தங்கியிருக்க வேண்டாம், அதிக கூட்டம் நிறைந்த இடங்களுக்கும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களுக்கும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை அருந்தவும், சுற்றுப்புறங்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயிரம் கிலோ அன்னம்! தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்!!

காற்றே பூங்காற்றே... அஹானா சர்மா!

சிங்கப்பூரில் 20 ஆயிரம் அடிகள்... அங்கிதா சர்மா!

கலைகளிலே அவள் ஓவியம்... சஞ்சனா திவாரி!

ஹேப்பி பர்த் டே... குஷி கபூர்!

SCROLL FOR NEXT