எங்க ஏரியா.. உள்ள வராத.. ஜார்க்கண்ட் எல்லையில் காவல் நிற்கும் பெண்கள் 
இந்தியா

எங்க ஏரியா.. உள்ள வராத.. ஜார்க்கண்ட் எல்லையில் காவல் நிற்கும் பெண்கள்

இங்கே ஜார்க்கண்ட் கிராமத்திலும் எல்லைப் பாதுகாப்பை மக்கள் தீவிரமாகக் கருதி, ஒவ்வொரு எல்லையிலும் பெண்கள் காவல் காக்கிறார்கள்.

ENS


ராஞ்சி: ஒரு நாட்டுக்குத்தான் எல்லைப் பாதுகாப்பு அவசியம் என்று நினைக்கவேண்டாம். இங்கே ஜார்க்கண்ட் கிராமத்திலும் எல்லைப் பாதுகாப்பை மக்கள் தீவிரமாகக் கருதி, ஒவ்வொரு எல்லையிலும் பெண்கள் காவல் காக்கிறார்கள்.

பிகார் - ஜார்க்கண்ட் எல்லைப் பகுதி கிராமங்களின் ஒவ்வொரு மூளைமுடுக்குகளிலும் அந்தந்த கிராமப் பெண்கள் கையில் தடியுடன், வெளியாட்கள் தங்கள் கிராமத்துக்குள் நுழைந்து உலாவுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு இருப்பதால், அந்த மாநில கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அருகிலிருக்கும் ஜார்க்கண்ட்டுக்குள் வந்து கிராமங்களில் இருக்கும் மதுபானக் கடைகளுக்கு படையெடுக்கிறார்கள். இதனால், தங்கள் கிராமங்களில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் அதனைத் தடுக்க பெண்களே களத்தில் இறங்கியுள்ளனர்.

பிகாரிலிருந்து மதுவுக்கு அடிமையான ஆண்கள் எங்கள் கிராமத்துக்குள் நுழைவதால் பல இன்னல்கள் ஏற்படுகின்றன. இதனால் பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனைத் தடுக்க பெண்களே தங்கள் கிராமப் பாதுகாப்பை கையிலெடுத்துக் கொண்டுள்ளனர்.

இரவு பகல் பாராமல், பெண்களே தங்களுக்குள் குழு அமைத்து, 24 மணி நேரமும் எல்லையில் கண்காணிப்பை மேற்கொள்கிறார்கள். மதுகுடிக்க வரும் பிகார் குடிமகன்களை, இங்கே மதுபானம் கிடைக்காது என்று கூறி அவர்களே திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். பெரிய அளவில் பெண்கள் கூட்டம் கையில் கம்புகளுடன் நிற்பதால் வேறு வழியின்றி ஆண்கள் திரும்பிச் சென்று விடுவதாகவும், தற்போது கிராமத்தில் அமைதியாக வாழ்வதாகவும் பெண்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT