முகப்பு
இந்தியா

சுவையற்ற உணவுகளை மன்மோகன்சிங் பரிமாறவில்லை: ப.சிதம்பரம்

நல்லவேலை அதிகமாக வேகவைத்த, சுவையற்ற உணவுகளை மன்மோகன்சிங் பரிமாறவில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:21 AM
பகிர்:


1991 ஆம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் "அரைவேக்காடானவை" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில், நல்லவேலை அதிகமாக வேகவைத்த, சுவையற்ற உணவுகளை மன்மோகன்சிங் பரிமாறவில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார். 

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நிர்மலா சீதாராமன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 1991 ஆம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் "அரைவேக்காடானவை" என்று கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 1991 இல் மத்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன்சிங்கிற்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 

அரவது ட்விட்டர் பக்க பதிவில், நல்லவேளை, பணமதிப்பிழப்பு,  பல விகிதங்கள் கொண்ட ஜிஎஸ்டி மற்றும் பெட்ரோல், மற்றும் டீசல் மீதான கொடிய வரிகள் போன்ற அதிகமாக வேகவைத்த மற்றும் சுவையற்ற உணவுகளை டாக்டர் மன்மோகன்சிங் வழங்கவில்லை. கடவுளுக்கு நன்றி.

நிதியமைச்சர் பல்கலைக்கழகத்தில் பேக்கரி மற்றும் சமையல் வகுப்புகளை எடுத்ததை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு நன்றி என்று ப.சிதம்பரம் கிண்டலாக கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →