நாட்டில் புதிதாக 5,664 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 35 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,664 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,664 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 5,618 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,922 ஆக பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | துறையூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - பீதியில் மக்கள்
கடந்த 24 மணி நேரத்தில் 4,555 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,57,929 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,337 ஆக உள்ளது.
நாட்டில் இதுவரை 2,16,56,54,766 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 14,84,216 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.