இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள்

DIN

ஜம்மு-காஷ்மீரில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திறந்து வைத்தார். 

தெற்கு காஷ்மீரின் புல்வாமா, ஷோபியான் ஆகிய மாவட்டங்களில் பல்நோக்கு திரையரங்கங்கள் இன்று (செப்.18) திறந்து வைக்கப்பட்டன. 

திரையரங்குகளை திறந்து வைத்துப் பேசிய மனோஜ் சின்ஹா, இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மருத்துவ கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, தரமான கல்வி போன்றவற்றை கொடுத்து இளைஞர்களை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. திரையரங்குகள் மூலம் வேலைவாய்ப்பு உருவாவதோடு மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு சமூக பாதுகாப்பும் ஏற்படுகிறது. 

விரும்பத்தகாத சூழல் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீரில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT