இந்தியா

தில்லியில் மேலும் 101 பேருக்கு டெங்கு: பாதிப்பு 396 ஆக உயர்வு!

PTI

தலைநகர் தில்லியில் டெங்கு தொற்று மெல்ல அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக தில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

செப்.9-ம் தேதி வரை 295 டெங்கு தொற்று பதிவாகியுள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மேலும் 101 பேருக்கு புதிதாகத் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து செப்.17 வரை மொத்த பாதிப்பு 396 ஆக உயர்ந்துள்ளது. 

2017-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 17 வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட டெங்கு வழக்குகளின் எண்ணிக்கை 1,465 ஆக இருந்தது. இந்த நோயால் இந்தாண்டு இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இந்த ஆண்டு செப்டம்பர் 17 வரை 92 மலேரியா மற்றும் 17 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன.  

அதிகரித்து வரும் டெங்கு வழக்குகள் எங்களுக்கு கவலையளிக்கும் விஷயம். அதை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இந்த நோய்ப் பாதிப்பு பொதுவாக ஜூலை, நவம்பர் மாதங்களில் பதிவாகும். ஆனால், இந்த பாதிப்பு காலம் டிசம்பர் மத்திவரை நீடிக்கும். இந்தாண்டு, கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற காலநிலை காரணமாக டெங்கு பாதிப்புகள் முன்கூட்டியே பதிவாகும் சூழல் நிலவுகிறது.

கடந்தாண்டு, தலைநகரில் 9,613 டெங்கு பாதிப்புகள் பதிவானது. இது 2015ல் 23 இறப்புகளும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தலா பத்து பேரும், 2018 இல் நான்கு பேரும், 2019 இல் 2 பேரும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.

தில்லியில் 2016ல் 4,431 பேருக்கும், 2017ல் 4,726 பேருக்கும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை 2018இல் 2,798 ஆகவும், 2019இல் 2,036, 2020இல் 1,072 ஆகவும் குறைந்துள்ளது. 2015இல் நகரில் டெங்கு பாதிப்பு 10,600ஐத் தாண்டியது. 

தில்லியில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களிலும், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட  அரசு அலுவலகங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1996-க்குப் பிறகு தில்லியில் ஏற்பட்ட மிக மோசமான டெங்கு பாதிப்பு இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT