இந்தியா

நட்டாவுடன் பாஜகவில் இணையவுள்ள அமரீந்தர் சிங் சந்திப்பு!

PTI

முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் பாஜகவில் சேருவதற்கு முன்னதாக அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டாவை திங்கள்கிழமை சந்தித்தார். 

50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வந்த 80 வயதான அமரீந்தர் சிங் கடந்தாண்டு அக்கட்சியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கிய அவர் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளார். 

சுக்தேவ் சிங் திண்ட்சா தலைமையிலான சிரோமணி அகாலி தளம் (சன்யுக்) ஆகியவற்றுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், அதன் வேட்பாளர்கள் எவரும் வெற்றியைப் பதிவு செய்ய முடியவில்லை, சிங் பாட்டியாலாவில் தோல்வியடைந்தார். 

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில்  இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் அமரீந்தர் சிங் பாஜகவில் இணையவுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கடந்த வாரம் அறிவித்தார். 

முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் லண்டனில் இருந்து திரும்பிய பஞ்சாப் முன்னாள் முதல்வர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT