ஜெ.பி.நட்டா (கோப்புப் படம்) 
இந்தியா

நாளந்தா பல்கலை.க்கு ரூ.2,700 கோடி: ஜெ.பி.நட்டா

பிகாரிலுள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தை பேணி பராமரிப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் ரூ.2,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.  

DIN


பிகாரிலுள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தை பேணி பராமரிப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் ரூ.2,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா புதன்கிழமை இன்று (செப்.21) தெரிவித்துள்ளார்.  

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள தாகூர் அரங்கில் இன்று பிற்பகல் பேராசிரியர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. 

இதில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கல்வி நிறுவனங்கள் எதிர்கால மறுமலர்ச்சியின் பாதையாக திகழ்கின்றன. 

நாலந்தா பல்கலைக் கழகத்தின் பெருமையை பேணிக்காக்கும் வகையில், அதனை மேம்படுத்துவதற்காக ரூ.2700 கோடியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT