உ.பி.யில் பள்ளி ஆசிரியர், மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியரும், மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியரும், மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசூல்பூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளியின் ஆசிரியரும், ஒன்பதாம் வகுப்பு படித்த 17 வயது மாணவிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பள்ளி முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, ஆசிரியரும், மாணவியும் செப்டம்பர் 3-ம் தேதி முதல் காணாமல் போனதாகத் தகவல் வந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, மாணவியின் குடும்பத்தினர் தனது மகளைக் காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் குழு, மிகவும் மோசமான நிலையில் இரண்டு சடலங்களை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட சடலங்கள் காணாமல் போன ஆசிரியர், மாணவி என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் தற்கொலைக்கான குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இருவரும் பத்து நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டதாக உடல்களின் நிலை தெரிகிறது என்றும் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் விபின் தடா தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.