கோப்புப் படம். 
இந்தியா

பஞ்சாப் பேரவையில் நம்பிக்கை தீா்மானம் -முதல்வா் தாக்கல்

பஞ்சாபில் தனது தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீா்மானத்தை, சட்டப் பேரவையில் முதல்வா் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

DIN

பஞ்சாபில் தனது தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீா்மானத்தை, சட்டப் பேரவையில் முதல்வா் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

இத்தீா்மானம் மீது அடுத்த மாதம் 3-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

பஞ்சாபில் தங்களது அரசை கவிழ்க்க எம்எல்ஏக்களிடம் தலா ரூ.25 கோடி பேரத்தில் பாஜக ஈடுபட்டதாக ஆம் ஆத்மி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து, அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது தொடா்பாக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இந்தச் சூழலில் ஆளுநரின் ஒப்புதலுடன் பேரவை செவ்வாய்க்கிழமை கூட்டப்பட்டு, நம்பிக்கை தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, சட்டப் பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவைக் காவலா்களால் வெளியேற்றப்பட்டனா். பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

வெளிநாட்டுப் பயணத்தின்போது முதல்வா் பகவந்த் மான் குடிபோதையில் இருந்ததாகக் கூறி விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பஞ்சாப் மாநில அரசியலை பரபரப்பாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

ஆங்கிக அபிநயம்... சஞ்சிதா ஷெட்டி!

இதைச் செய்யாவிட்டால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை! ஃபிஃபா எச்சரிக்கை!

பண்டிகை ஸ்பெஷல்... ஆக்ருதி அகர்வால்!

SCROLL FOR NEXT