கைது செய்யப்பட்ட அப்துல் சதார் (நடுவில் இருப்பவர்) 
இந்தியா

கேரள பிஎஃப்ஐ பொதுச் செயலாளர் கைது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்பின் கேரள மாநில பொதுச் செயலாளர் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.

DIN

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்பின் கேரள மாநில பொதுச் செயலாளர் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. குறிப்பாக, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து கடந்த 22-ஆம் தேதி சோதனை நடத்திய சோதனையில் 106 பேரும், நேற்று நடத்திய சோதனையில் 250 பேரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், பிஎஃப்ஐ அமைப்பு மற்றும் அதன் 8 துணை அமைப்புகள் சட்டவிரோத இயக்கமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததுடன் பிஎஃப்ஐ அமைப்பின் இணையதளத்தை முதல்கட்டமாக மத்திய அரசு முடக்கியுள்ளது.

இந்நிலையில், இன்று கேரள மாநிலத்தின் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பொதுச்செயலாளர் அப்துல் சதார் ஆழாப்புழாவில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரிடம் இயக்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெச்டிஎஃப்சி கடனளிப்பு 9% உயா்வு

8 நகரங்களில் மிதமாக அதிகரித்த வீடுகள் விற்பனை

விஜய் தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டாரா? டி.டி.வி. தினகரன் கேள்வி

குளியல் அறையில் இருந்து மீன் வியாபாரி சடலம் மீட்பு

மீண்டும் செயல்படத் தொடங்கியது அகிலேஷ் யாதவின் ஃபேஸ்புக் கணக்கு

SCROLL FOR NEXT