இந்தியா

பிஎஃப்ஐ அமைப்புக்குத் தடை! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

DIN

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைநகரான தில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் பொருட்டு, குறிப்பாக தில்லி ஷாஹீன் பாக் பகுதியில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய அமைப்புகளுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) உள்பட அதனோடு தொடர்புடைய 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தில்லியின் ஷாஹீன் பாக் பகுதியிலுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். 

மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, ட்ரோன்கள் மூலம் கண்காணிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

கடந்த 10 நாள்களுக்கு முன்பு தில்லி ஜாமியா நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT