இந்தியா

'உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் தீர்வு காணுங்கள்'

PTIபுது தில்லி: உக்ரைன், சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் பயின்று, பாதியில் திரும்பிய மாணவர்களின் கல்வியை தொடர்பான விவகாரத்தில் தீர்வு காணுங்கள் என்று மத்திய அரசுக்கும், தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நேரத்தில், அவர்களது கல்வியைத் தொடர தீர்வு காணப்படாவிட்டால், அவர்களது எதிர்காலம் சிக்கலில் விடப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் விக்ரம் நாத் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், தேவைப்பட்டால், மத்திய அரசு, நிபுணர்கள் அடங்கிய ஆணையம் ஒன்றை அமைத்து, மாணவர்களின் பிரச்னையை தீர்க்க தீர்வு என்ன என்பது குறித்து ஆராயலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் சொத்து என கருதப்படும் மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற மத்திய அரசு தங்களது ஆலோசனைக்கு உரிய முக்கியத்துவம் அளித்து தீர்வு காணும் என நம்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீர்வு காணப்படாவிட்டால், மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலமும் வீணாகி, அவர்களது குடும்பத்தினருக்கு துன்பம் ஏற்படும். நிபுணர்கள் ஆலோசித்து தீர்வு காணு உகந்த வழக்காக இது உள்ளது. வழிகாட்டுதல்களை நாங்கள் வழங்கவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் என்று மத்திய அரசுக்கும், தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை காரணமாக, அங்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உயா்கல்வி மேற்கொண்டு வந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவா்கள் படிப்பை பாதியில் கைவிட்டு தாயகம் திரும்பினா். உக்ரைன்-ரஷிய போா் தொடா்ந்துகொண்டே இருப்பதால், இந்த மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷ்யாவில் கடும் வெள்ளம் - புகைப்படங்கள்

டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

SCROLL FOR NEXT