முகப்பு
இந்தியா

தில்லியில் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் விழுந்த ட்ரோன்: ரயில் சேவை துண்டிப்பு!

தில்லியின் ஜசோலா விஹார் அருகே மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் ட்ரோன் விழுந்ததால் சிறிது நேரம் ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. 

Updated On : 25 டிசம்பர், 2022 at 6:34 PM
பகிர்:


தில்லியின் ஜசோலா விஹார் அருகே மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் ட்ரோன் விழுந்ததால் சிறிது நேரம் ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. 

தில்லியின் ஜசோலா விஹார் அருகே மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் மருத்துப் பொருள்களை ஏற்றிச் சென்ற ட்ரோன் திடீரென விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ட்ரோனை கைப்பற்றி ஆய்வு மேற்கண்டதில் அதில் தனியார் நிறுவனம் ஒன்றின் மருந்துவம் சார்ந்த பொருள்கள் இருந்தது தெரிவந்தது. 

Advertisement

இதனால் சிறிது நேரம் மெஜந்தா பாதையில் மெஜந்தா ரயில் சேவை சிறிது நேரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் தற்போது மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.