சத்தீஸ்கர்: இறுதிச் சடங்கில் உணவு சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நல பாதிப்பு!
சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் இறுதிச் சடங்கில் உணவு சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நல பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் இறுதிச் சடங்கில் உணவு சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நல பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமானுஜ நகர் மேம்பாட்டுத் தொகுதிக்கு உள்பட்ட விசுன்பூர் கிராமத்தில் ஞாயிறு காலை இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40-க்கும் மேற்பட்டோர் உணவை உட்கொண்டுள்ளனர். உடனே வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சூரஸ்பூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சிங் கூறுகையில்,
Advertisement
உணவு கெட்டுப்போனதாகவும், இதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட அனைவரும் சூரஜ்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. தற்போது அனைவரும் நலமாக இருப்பதாகவும், ஆபத்துக்கட்டத்தை தாண்டியதாகவும் தெரிவித்தார்.
சனிக்கிழமை இறுதிச்சடங்கின் பத்தாவது நாள் சடங்கில் பங்கேற்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குழந்தைகள், பெண்கள் உள்பட 40 பேர் இந்த விஷ உணவைச் சாப்பிட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவு விஷம் கலந்ததற்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.