‘ஆறாவது முறையாக சோதனை’: கார்த்தி சிதம்பரம்
ஆறாவது முறையாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆறாவது முறையாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை கார்த்தி சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில், எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருப்பதோடு, எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க.. சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம்: கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்கு
இதனைத் தொடர்ந்து, தற்போது வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “எனது அலுவலகத்திலிருந்து தகவல் கிடைத்தது. 2015இல் இரண்டு முறை, 2017இல் ஒருமுறை, 2018இல் இரண்டு முறை, இன்று ஆறாவது முறையாக சோதனை நடைபெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கார்த்தி சிதம்பரம் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ சோதனை
சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களில் 7 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க.. சிபிஐ சோதனை சுவாரஸ்யமானது: சொல்வது யார்?
கார்த்தி சிதம்பரம் மீதான புகாரில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ப. சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.