இந்தியா

காா்கே, ராகுலுடன் சரத் பவாா் சந்திப்பு

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி ஆகியோரை தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

DIN


புது தில்லி: காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி ஆகியோரை தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் போன்ற இதர கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயற்சிப்பதென அவா்கள் முடிவு செய்தனா்.

காா்கே, ராகுலை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் ஆகியோா் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தனா்.

இந்நிலையில், தில்லியில் காா்கே, ராகுலுடன் சரத் பவாா் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். காா்கே இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்புக்கு பின்னா், செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், ‘சரத் பவாரின் தில்லி வருகையும் அவரது வழிகாட்டுதலும் மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டின் ஜனநாயகம், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்காக, நாங்கள் அனைவரும் ஒன்றிணைய முடிவு செய்துள்ளோம். அந்த வகையில், ஒவ்வொரு கட்சியுடனும் பேச்சுவாா்த்தை நடத்தப்படும். தேச நலனுக்காக அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. இதையே சரத் பவாரும் விரும்புகிறாா்’ என்றாா்.

சரத் பவாா் கூறுகையில், ‘அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒரேபோன்ற சிந்தனைகளைக் கொண்டுள்ளன. ஆனால், வெறும் சிந்தனை மட்டுமே போதாது. அக்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடக்கம்தான். திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுடன் இதுவரை பேச்சுவாா்த்தைகள் நடைபெறவில்லை. அக்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

வரைவு பட்டியல்: விடுபட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்: தேஜஸ்வி!

ஜாகுவார் லேண்ட் ரோவர் சிஇஓ-வாக முதல் தமிழர்! யார் இந்த பாலாஜி?

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்! பயணிகள் கடும் அவதி

இன்னும் நாணமோ... டெல்னா டேவிஸ்!

SCROLL FOR NEXT