இந்தியா

கேஜரிவாலுக்கு ஆதரவாகப் போராட்டம்: ஆம் ஆத்மி கட்சியினர் கைது!

அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்தனர். 

DIN


அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்தனர். 

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக கேஜரிவால் இன்று ஆஜராக உள்ள நிலையில், காஷ்மீர் கேட் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காஷ்மீர் கேட் அருகே கூடிய தொண்டர்கள், அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து தில்லி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் கேட் அருகே முழக்கங்களை எழுப்பியவர்களை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். 

தில்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராவதற்கு முன்பு, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை நடத்தினார். தனது இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில் உம்ரான் உசேன், ராஜ்குமார் ஆனந்த், கைலாஷ் கெலாட் உள்ளிட்ட தில்லி அமைச்சர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

இன்றைய மின்தடை

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

SCROLL FOR NEXT