இந்தியா

ஆட்சியைப் பிடிக்க மட்டுமே அண்ணா ஹசாரேவை பயன்படுத்திக் கொண்டனர்: கிரண் ரிஜிஜு

ஊழல் என்ற பெயரில் சமூக செயற்பாட்டாளர் அண்ணா ஹசாரேவினைப் பயன்படுத்தி ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்ததாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார்.

DIN

ஊழல் என்ற பெயரில் சமூக செயற்பாட்டாளர் அண்ணா ஹசாரேவினைப் பயன்படுத்தி ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்ததாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிஐ அதிகாரிகளால் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, இன்று (ஏப்ரல் 16) அவர் சிபிஐ கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேதி குறிப்பிடப்படாத அண்ணா ஹாசாரேவின் விடியோ ஒன்றினையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில் ஹசாரே தில்லி கலால் கொள்கையை கடுமையாக விமர்சிப்பது போல் உள்ளது.

மேலும், இது தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: அவர்கள் (ஆம் ஆத்மி) ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள். அவர்கள் அண்ணா ஹசாரேவின் பேச்சினைக் கூட கேட்க மாட்டார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மக்களையும், அண்ணா ஹசாரேவையும் ஏமாற்ற ஊழல் என்பதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஆட்சிக்கு வருவதற்காக மட்டுமே அண்ணா ஹசாரேவை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர் எனப் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT