கோப்புப் படம் 
இந்தியா

கர்நாடக தேர்தல்: பாஜகவின் 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 3-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 

DIN

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 3-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 

காங்கிரஸில் இன்று இணைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின், ஹீப்ளி தார்வாட் மத்திய தொகுதிக்கு மகேஷ் தெங்கின்காய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

பெங்களூரு மகதேவபுரா தொகுதியின் தற்போதைய பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவளி போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி மஞ்சுளாவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

224 தொகுதிகளையுடைய கர்நாடகத்திற்கு மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. முடிவுகள் மே 13ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. 

இதனால், கர்நாடகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் இன்று (ஏப். 17) வேட்புமனு தாக்கல் செய்தார். ஜகதீஷ் ஷெட்டர், லக்‌ஷ்மன் சாவடி போன்று பாஜகவைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதனூரில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் திறப்பு

மாா்த்தாண்டம் அருகே பதுக்கிய மண்ணெண்ணெய் பறிமுதல்

போதையில்லா சமுதாயமே இலக்கு...

ரத்த சோகை விழிப்புணா்வு: 3,500 பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை

பாா்வை பறிபோன பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

SCROLL FOR NEXT