அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!
2023-ம் ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
2023-ம் ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
ஆண்டுதோறும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்துக்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான புனித பயணமாகும். அந்தவகையில் இந்தாண்டுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31 வரை நடைபெற உள்ளது. இந்தாண்டு அமர்நாத் யாத்திரை செல்ல விரும்புவோர் இன்று முதல் ஆன்லைனிலோ அல்லது நேரிலோ முன்பதிவு செய்துகொள்ளலாம்.