முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் ஒரே மாதத்தில் நிகழ்ந்த 3வது சம்பவம்: மாவோயிஸ்டுகள் தாக்குதல்! 

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்ய முயன்ற காவலர் காயமடைந்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
கோப்புப்படம்
பகிர்:

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்ய முயன்ற காவலர் காயமடைந்தார். 

பிஜப்பூர் மாவட்டத்தில் கடந்த 22 நாள்களில் நிகழ்ந்த மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

இந்த வெடிகுண்டு சம்பவம் நெலஸ்னர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பங்கபால் கிராமத்திற்கு அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நிகழ்ந்தது. 

மாவோயிஸ்டுகள் புதைத்துவைத்திருந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும்போது, காவலர் சீதாராம் குடியம் காயமடைந்தார். 

காயமடைந்த காவலர் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஏப்ரல் 17 அன்று, படே துங்காலி கிராமத்திற்கு அருகே இதேபோன்ற சம்பவத்தில் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) காயமடைந்தார்.

மார்ச் 30 அன்று, பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள நெலஸ்னர் பகுதியில் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய முயன்றபோது சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த ஒருவர் காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →