இந்தியா

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் குறித்து காங்கிரஸ் சந்தேகம்

DIN

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதற்கு சட்டப்பூர்வமான உறுதி அளிப்பதில் பாஜக நிலை குறித்து காங்கிரஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் பாஜக தொடர்ந்து அவர்களை அலைக்கழித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து காங்கிரஸைச் சேர்ந்த ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா கூறியதாவது: அரசின் திட்டங்கள் விவசாயிகளை அதிக அளவில் கடனில் ஆழ்த்தியுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டில் இரட்டிப்பாக்குவதாக பாஜக கூறியது. ஆனால், அவர்களின் நிலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் விவசாயிகள் நலன் சார்ந்ததாக இல்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்ற கனவு தகர்ந்துவிட்டது. விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை கூட அவர்களுக்கு உறுதியாக கிடைக்கும் எனக் கூற முடியவில்லை. மத்திய அரசு வாராக் கடன்களை கோடிக்கணக்கில் தள்ளுபடி செய்கிறது. குறைந்தபட்ச  ஆதாரவிலையை அளிக்க சட்டமியற்ற பாஜக முயற்சி செய்கிறதா என்பதும் சந்தேகம் தான் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT