முகப்பு
இந்தியா

சஹரன்பூரில் மின்னல் தாக்கி விவசாயி பலி!

உத்தரபிரதேச மாவட்டத்தின் டிட்ரோ பகுதியில் மின்னல் தாக்கியதில் 43 வயதான விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

சஹரன்பூர்: உத்தரபிரதேச மாவட்டத்தின் டிட்ரோ பகுதியில் மின்னல் தாக்கியதில் 43 வயதான விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த விவசாயியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கத்லானா கிராமத்தில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.