தலைநகர் தில்லியில் லேசான மழை
தலைநகர் தில்லியின் சில பகுதிகளில் பெய்யும் லேசான மழையால் அந்தப் பகுதிகளில் தொடர்ந்த வெப்ப காற்று ஓரளவு குறைந்து இதமான சூழல் உருவாகியுள்ளது.
தலைநகர் தில்லியின் சில பகுதிகளில் பெய்யும் லேசான மழையால் அந்தப் பகுதிகளில் தொடர்ந்த வெப்ப காற்று ஓரளவு குறைந்து இதமான சூழல் உருவாகியுள்ளது.
தில்லியின் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல அடுத்த சில நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வானிலை அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நொய்டா மற்றும் குருகிராமின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. லேசான காற்றும் வீச வாய்ப்புள்ளது. இன்று (ஏப்ரல் 20) அதிகபட்சமாக 36.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. குறைந்தபட்சமாக 23.4 டிகிரி செல்சியஸ் பதிவானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.