கேரளத்தில் பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடாவில் உள்ள தனக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை கேரள அரசுக்குத் திருப்பித் தர கோகோ கோலா நிறுவனம் முன்வந்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜுவான் பாப்லோ ரோட்ரிக்ஸ் ட்ரோவாடோ, முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்னதாக கேரளத்தில் விவசாயிகளின் தலைமையிலான விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு (FPO) விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக கோலா நிறுவனத்தின் நிலத்தை திருப்பித்தர மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
அதன் எதிரொலியாக கோலா நிறுவனம் 35 ஏக்கர் நிலத்தை மாநில அரசுக்கு திருப்பி அளித்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கு பண்ணை அமைக்க தொழில்நுட்ப உதவி வழங்கவும் நிறுவனம் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.