கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடக காங்கிரஸ் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் சென்ற ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் குடும்பத்தினர் பயணித்த தனியார் விமானத்தை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர். 

DIN

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் குடும்பத்தினர் பயணித்த தனியார் விமானத்தை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர். 

இந்த தனியார் ஹெலிகாப்டர் பெங்களூருவிலிருந்து தக்‌ஷின கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலாவுக்கு சென்றது. இந்த ஹெலிகாப்டரில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமாரின் மனைவி உஷா, அவரது மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோர் பயணம் செய்தனர். அவர்கள் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதசுவாமி கோயிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் தர்மஸ்தலாவில் தரையிறங்கியவுடம் தேர்தல் அதிகாரிகள் ஹெலிகாப்டரை சோதனையிட அங்கு வந்தனர். தேர்தல் அதிகாரிகளிடம் அந்த ஹெலிகாப்டரின் பைலட் என்ன காரணத்துக்காக சோதனை செய்கிறார்கள்  எனக் கேட்டதாகத் தெரிகிறது. 

அவருக்கு பதிலளித்த தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: நாங்கள் ஹெலிகாப்டரை சோதனையிடுவதற்காக பெற்ற அனுமதி கடிதத்தை ஏற்கனவே அளித்துள்ளோம். நாங்கள் ஹெலிகாப்டரை சோதனையிட வேண்டும் என்றனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த நாள் முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. 

கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோயிலுக்கு சென்று கொண்டிருந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் காரினை இடைமறித்து தேர்தல் அதிகாரிகள் சோனையிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT